ஐரோப்பாவில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் ஐந்து இலட்சம் கொவிட் உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அத்துடன் குறிப்பாக தற்போது ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளிலும் கொவிட் பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐரோப்பாவில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 6 சதவீதம் அதிகமாகியுள்ளது.
இதற்கு முன்னர், முந்தைய வாரத்தைவிட 18 சதவீதம் அதிகமாக புதிய கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது.