சவுதி அரேபியாவிற்கு 650 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வளைகுடா இராச்சியத்துடன் ஜோ பைடன் நிர்வாகத்தின் முதல் பெரிய ஆயுத ஒப்பந்தம் இதுவென அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ‘பென்டகன் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரியாத்திற்கு உதவும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த முன்மொழியப்பட்ட விற்பனையானது, மத்திய கிழக்கில் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய சக்தியாக தொடர்ந்து இருக்கும். நட்பு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை ஆதரிக்கும்’ என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
ஏமனில் சவுதி அரேபியாவின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவை நிறுத்துவதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறிய சில மாதங்களுக்குப் பிறகு, இந்த விற்பனை வந்துள்ளது.
சவுதி அரேபியா வெளியுறவுத் துறையின் அரசியல்- இராணுவ விவகாரங்களுக்கான பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கடந்த ஆண்டில் சவுதி அரேபியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய தாக்குதல்களின் அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம்.
சவுதி விமானங்களில் இருந்து அனுப்பப்பட்ட சவுதி யுஐஆ-120ஊ ஏவுகணைகள், இந்த தாக்குதல்களை இடைமறிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது அமெரிக்கப் படைகளையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் இராச்சியத்தில் உள்ள 70,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் ஆபத்தில் உள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், சட்டமியற்றுபவர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் ஒரு மறுப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஒப்பந்தத்தைத் தடுக்கலாம்.
செப்டம்பர் மாதம் 500 மில்லியன் டொலர்கள் ஹெலிகொப்டர் பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
சவுதி அரேபியாவின் விமர்சகர்கள்இந்த ஒப்பந்தத்தை கடுமையாக சாடினார்கள். ‘உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கும், நமது பாதுகாப்புப் பொருளாதாரத்தை எரிபொருளாக்குவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று எழுத்தாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மரியன்னே வில்லியம்சன் தெரிவித்தார்.