நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கினை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், திவிநெகும திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி 5 மில்லியன் நாட்காட்டியை அச்சிட்டு அரசுக்கு 29.4 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.