ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம் கொள்கை பிரகனடத்திற்கு அமைவாக” 100,000 கிலோ மீற்றர் வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் வேலைகளை பூர்த்தி செய்த 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து மக்கள் உரிமையாக்குதல் செயற்பாடானது இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைவாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டம் பள்ளச்சேனை பகுதியில் வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசில் அமைக்கப்பட்ட இரண்டு கிலோமீட்டர் நீளமான கொங்கிறிட் வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
49 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.