மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்றும் அது தவறான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை என்பதோடு, இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.