காலநிலை நெருக்கடி குறித்து மேலும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிளாஸ்கோவில் சுமார் 100,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
COP26 உச்சிமாநாட்டின் போது இதுவரை நடந்த மிகப் பெரிய எதிர்ப்பு போராட்டம் இது என்பதோடு உலகம் முழுவதும் இதேபோன்ற நூற்றுக்கணக்கான போராட்டங்கள் இடம்பெறுள்ளன.
மேலும் க்ளைட் நதியின் மீது உள்ள வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 21 விஞ்ஞானிகளும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கென்யா, துருக்கி, பிரான்ஸ், பிரேசில், அவுஸ்ரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட மேலும் 100 நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்றன.
குறிப்பாக இங்கிலாந்தின் பிற பகுதிகளில் சுமார் 100 காலநிலை மாற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.