வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பருவமழையால் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயற்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தோடு கொரோனா தொற்றை வெற்றிகொண்டதைப் போல பருவமழையையும், புயலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் எதிர்வரும் 9ஆம் திகதியன்று வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.