ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68,000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14,000 வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் 1500 வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2,500 வீதிகள் திறக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருதுத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டதாவது,
கொவிட் நெருக்கடி நிலை இருந்த போதிலும் நாட்டின் நெடுஞ்சாலை அபிவிருத்திகளை தொடர ஜனாதிபதி எங்களுக்கு அறிவுறுத்தினார். நாட்டில் கொடிய தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திய போதிலும், நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த 1500 வீதிகளை மக்களிடம் கையளிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.