கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதியைத் திறப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானிக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கடுகண்ணாவை பிரதான வீதியில் மண்மேடும் பாறைகளும் சரிந்து வீழ்ந்தன.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டன.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10 மணிமுதல் குறித்த பகுதியில் போக்குரவரத்து தடையை அறிவித்த நெடுஞ்சாலை அமைச்சு, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.