2022 வரவு செலவு திட்டம் அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை காணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளிற்கான தீர்வை வரவுசெலவு திட்டம் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுதிட்ட பற்றாக்குறை மற்றும் அந்நியசெலாவணி நெருக்கடி ஆகியவற்றிற்கு தீர்வை காண்பதற்கு வரவுசெலவுதிட்டம் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஏற்றுமதி அதிகரித்தால் மாத்திரமே அந்நிய செலாவணி நாட்டிற்குள் வரும் என குறிப்பிட்ட அவர், ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்த வேண்டிய விடயங்கள் எவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் அதிபர் சம்பள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள எரான் விக்ரமரத்ன, ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதா என உறுதியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.