நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் ஷமி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், அணித்தலைவர் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அஜின்கியா ரஹானே அணித்தலைவராகவும் செட்டீஸ்வர் புஜாரா துணைத் தலைவராகவும் செயற்படவுள்ளனர்.
மேலும், ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதுதவிர ஆந்ரா விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஸ்ரீகர் பாரத் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ளார். இவர் ஐ.பி.எல். தொடரில் விராட் கோஹ்லியின் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சூர்யகுமார் யாதவ், பிரத்வீ ஷா, ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் மேலதிக வீரர்களாக அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த தொடரில் தான், முன்னாள் வீரரா ராகுல் ட்ராவிட் தனது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க்கவுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
அஜின்கியா ரஹானே (முதல் டெஸ்ட் அணித்தலைவர்), விராட் கோஹ்லி (இரண்டாவது டெஸ்ட் அணித்தலைவர்), கே.எல்.ராகுல், மாயங் அகர்வால், செட்டீஸ்வர் புஜாரா, சுப்மான் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ். பாரத், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ் மற்றும் பிரசீத் கிருஸ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா வரும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது. இதன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி ஜெய்பூரில் நடைபெறவுள்ளது.