2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்நோக்கும் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் விடைகளை வழங்கியுள்ளதாக ஆளும்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தேவை ஏற்படின் 2022 வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களைச் செய்யலாம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்தார்.
இதேவேளை பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரி விதிப்பதற்கு இந்த வரவு செலவு திட்டம் கவனம் செலுத்தியுள்ளது என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
அதேநேரம் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட்டால் கடன் சுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மேலும் வெற்றிகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தமைக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராட்டுகளை தெரிவித்தார்.