ரி-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலிருந்து, நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் டேவோன் கோன்வே விலகியுள்ளார்.
டேவோன் கோன்வேயின் இழப்பு நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு, கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கிண்ண தொடரின் இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், லியாம் லிவிங்ஸ்டன் வீசிய பந்துக்கு ஸ்டம்பிங் முறையில் டேவோன் கோன்வே ஆட்டமிழந்தார்.
இக்கட்டான நிலையில் ஏற்பட்ட இந்த ஆட்டமிழப்பு அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியால், அவர் ஆத்திரத்தில் தனது கையை துடுப்பாட்ட மட்டையின் மீது குத்தினார்.
இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.