இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவருமான விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று திடீரென முடக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது
சுமார் 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட அவரது பக்கம் காணாமல் போனதால், அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை முதல் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிய ரசிகர்களுக்கு ‘இந்த பக்கம் கிடைக்கவில்லை’ ‘இணைப்பு முறிந்துவிட்டது’ என்ற செய்திகளே திரையில் தோன்றி இருந்தன
விராட் கோலி தானாக முன்வந்து தனது கணக்கைச் செயலிழக்கச் செய்திருந்தாரா என்ற கேள்வி எழுந்திருந்தது
இந்தநிலையில் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது


















