சூடானில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகவும் ஒருவர் கண்ணீர்ப்புகை தாக்குதலினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதேவேளை போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 39 பொலிஸார் கடுமையான காயமடைந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இராணுவம் தலைமையிலான ஆளும் தரப்பு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.