எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனித்து போட்டியிடுமாறு கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உறுதிமொழியை நம்பி தற்போதைய அரசாங்கத்திற்கு தமது தரப்பினர் ஆதரவை வழங்கியது.
இருப்பினும் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் சமன் குமார குற்றம் சாட்டினார்.
எனவே எதிர்வரும் தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்ற பிரேரணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.