லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே ஒரு காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிவர்பூலில் இரவு முழுவதும் வீதிக்களில் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நினைவு தினத்தன்று லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக, நகரின் கென்சிங்டன் பகுதியில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 29, 26 மற்றும் 21 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரில் பயணித்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் அவர் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
சம்பவ இடத்திலேயே காயம் அடைந்த ஓட்டுநர், ஒரு நபர், நிலையான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், வடமேற்கு பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரின் துப்பறியும் அதிகாரிகள், வெடிப்புக்கான காரணத்தைப் பற்றி விசாரணைகளை தொடர்கின்றனர்மற்றும் விசாரணை வேகமாக தொடர்வதால் மெர்சிசைட் பொலிஸாருடன் சக ஊழியர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.