2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து அரசின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று (15) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை கூடி இந்த விடயம் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
இதன்போது வெள்ளிக்கிழமை நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மற்றும் யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளி கட்சிககள் முன்னர் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்படைத்தக்கது.