பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையினரால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்களின் ஏற்பாட்டில் குறித்த உதவிகள் வழங்கப்பட்டன.
வழங்கி வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்களுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் உபதவிசாளர் மு.கயன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் ரமேஸ் , வீரவாகுதேவர் மற்றும் வட்டார அமைப்பளர்களும் கலந்து கொண்டனர்.