இந்தியா மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்குவது பற்றி இதுவரை அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எந்த விதமான இராணுவ கொள்முதல்களையும் நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு மேற்கொள்ளப்படுமாயின் CAATSA எனப்படும் அமெரிக்காவின் தடைகள் பாயும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் CAATSA தடை என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதால் எந்த நாடும் அதில் இருந்து இயற்கையாகவே வதிவிலக்கு பெற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எந்த விதமான தடைகள் இந்தியா மீது வதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.