ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் மனநலம் குன்றியவர் என தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.















