இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படையில் ஏவுகணை அழிப்பு போர்க் கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் விரைவில் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே தெரிவிக்கையில், “ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலான விசாகப்பட்டினம் எதிர்வரும் 21 ஆம் திகதியும், நீர்மூழ்கிக் கப்பலான வேலா எதிர்வரும் 25 ஆம் திகதியும் கடற்படையில் இணைக்கப்படும்.
இதன்படி 39 கடற்படைக் கப்பல்கள், நீர்மூழக்கிக் கப்பல்கள் நாட்டின் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் கடல்சார் வலிமையை அதிகரிக்கும்.
கடல்சார் சூழ்நிலை என்பது சிக்கல் நிறைந்ததாகும். உலகளாவிய மற்றும் பிராந்திய அதிகாரச் சமன்பாடுகள் வேகமாக மாறி வரும் சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். புதிதாக உருவெடுக்கும் சாவல்களை சமாளிக்க இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.