நாடளாவிய ரீதியில் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 21ஆம் திகதி தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.