பிட்கொய்ன் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இதனை விரிவாக விவாதித்து அரச முடிவெடுக்க வேண்டும் எனவம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் காந்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய காலப்பகுதியில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்கொய்ன் பணப்பரிவர்த்தனைகள் பிரபலமாகி வருகின்றது.
இந்தநிலையில், முதலீட்டாளர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் இழுக்கப்படுகிறார்கள் என்றும் பலர் கடன் கிடைக்கும் என்ற ஆசையால் இதற்கு உடன்படுவதாகவும் சக்தி காந்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவுக்குப் பின்னர் முதலீட்டு சுழற்சி அதிகரிக்கும்போது வங்கிகள் முதலீட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.