அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஆகவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது என்பது சிறைக்கு செல்வதற்கு சமமானது எனவும் நாடாளுமன்றில் அவர் கூறினார்.
சர்வதேச சந்தையில் விலை உயர்வு காணப்படுகின்ற நிலையிலும், ஏனைய பல சிக்கல்கள் உள்ள நிலையிலும் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கான தீர்வு எதிர்க்கட்சியிடம் உள்ளதா என கேள்வியெழுப்பிய வாசுதேவ நாணயக்கார, கொரோனா தொற்று இல்லையெனில் வேறுவிதமாக இந்த வரவு செலவு திட்டம் உருவாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் தற்போது வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கருத்தில் கொண்டே இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.