கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட LG கிராமத்தைக்கட்டியெழுப்பும் பிரமுகர் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா தரணிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் உருவாக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான இலங்கையின் முன்னணி வணிகக்குழுமமான அபான்ஸ் மற்றும் Community Chest of Korea . அமைப்பு Korea Friends of Hope International Srilanka நிறுவனம் (KFHI) ஆகிய நிறுவனங்களின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட LG கிராமத்தை கட்டியெழுப்பும் பிரமுகர் திட்டத்தின் மூலம் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் கிராமங்களில் உள்ள தேவைகளை இனங்கண்டு அத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
அவ்வாறு வழங்கப்பட்ட வாய்ப்புக்களின் மூலம் இவ் வருடம் நான்கு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களில் முதலாவது திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் வவுனியா தரணிக்குளத்தில் கிராம அபிவிருத்திச்சங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் வசிக்கும் 610 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்கும் உயிர் வாழ்வதற்கு ஒரு துளி நீர் என்ற வடிகட்டுதல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது . கருத்தாக்கத்திட்டத்தில் கீழ் உருவாக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகட்டுதல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி . சரத் சந்திர, வவுனியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஞ்சீவன், Korea Friends of Hope International Srilanka நிறுவனத்தின் செயலாளர் லசிந்த நாணயக்கார, தரணிக்குணம் கிராம சேவையான அமல்ராஜ் , ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தரணிக்குளம் சமுர்த்தி அலுவலகர் ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர் திட்டத்தை மக்களிடம் கையளித்து வைத்துள்ளனர்.