தமிழகத்தில் டெங்கு தொற்றின் தாக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தற்போதுவரை 4 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டு வடக்கு கிழக்கு பருவமழை ஆரம்பமாகிய போது மாத்திரம் 813 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக தேனியில் 358 பேரும், மதுரையில், 239 பேரும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சென்னையில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாத்திரம் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் பதிவாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.