கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கரில் ட்மிட்ரிவ், மேற்படி அறிவித்துள்ளார்.
ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியாவின் மருத்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்த ரெட்டிஸ் நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசியானது ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் பாகமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மருந்தின் இரண்டாவது டோஸ் செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.