பிரித்தானியாவில் வர்த்தக நிலையங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய Omicron மாறுபாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் தமது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும் என சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றமடைக்கின்ற சூழலுக்கு ஏற்ப அரசாங்கம் விரைவாக செயல்படுவதா தெரிவித்துள்ள ஜாவிட், எனினும் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கு தாம் முன்பு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஒரு பூஸ்டர் வழங்கப்படும் என தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பிபிசி ரேடியோ 4 ற்கு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலை எதிர்கொள்வது பற்றி குறிப்பிட்ட பேராசிரியர் அந்தோனி ஹார்ன்டன் “முழு சமூகத்திலும் நோய் எதிர்ப்பு அளவை உயர்த்துவதற்கான ஒரு நல்ல, வலுவான நிலை உள்ளது. எனவே வயது வரம்பை நீட்டிப்பதன் மூலமும், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் இடையேயான இடைவெளியைக் குறைப்பதன் மூலமும் பூஸ்டர் திட்டத்தை விரிவாக்கி விடுவதாகவும், இது ஒரு விவேகமான உத்தியாக இருக்கும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதையும், பிரித்தானியாவில் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை வழங்கும் தட்டத்தையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அவை குளிர்காலத்திற்கான திட்டத்தின் B இன் ஒரு பகுதியாகும். இது NHS ஐப் பாதுகாக்க, கொவிட் பரவலை கட்டுப்படுத்த, தலையீடு செய்யும் தேவை ஏற்பட்டால் ஒரு தற்காலிக திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசாங்கம் “இதைவிட வேகமாகச் செயல்பட்டிருக்க முடியாது” என சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.