சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள வதை முகாம்களில், உய்குர் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதைக் காட்டும் புதிய ஆதாரம் சீனாவுக்கு எதிராக வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் மேற்குப் பகுதிக்கு பயணம் செய்த ‘குவாங்குவான்’ என்ற கண்ணாடி அணிந்த நபரினால் எடுக்கப்பட்ட 20 நிமிட காணொளி, அங்குள்ள சில முகாம்களின் இருப்பிடங்களைக் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு அமெரிக்க செய்தி நிறுவனமான Buzz Feed இன் கட்டுரையைப் படித்த பின்னரே அங்குள்ள சில முகாம்களின் இருப்பிடங்களைக் குறிப்பிட்டதாக ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது.
“சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், சின்ஜியாங்கில் நேர்காணல்களை நடத்துவதற்கு அணுக முடியாது” என குவாங்குவான் காணொளியொன்றில் கூறுகிறார்.
மேலும், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அங்கு செல்ல முடியாது, ஆனால் தன்னால் செல்ல முடியும்.என தான் நினைத்ததாகவும் அவர் குறித்த காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொனி, ஒக்டோபர் தொடக்கத்தில் YouTube தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் காணொளி தொடக்கத்தில், சீன அரசாங்கம் சின்ஜியாங்கில் பல வதை முகாம்களை அமைத்துள்ளதாக குவாங்குவான் கூறுகிறார்.
மேலும் அங்கு உள்ளூர் இன சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பாளர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது.
இந்த முகாம்கள், சீன அதிகாரிகளினால் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, இந்த தடுப்பு மையங்களை ‘மறு கல்வி’ முகாம்கள் என்று குறிப்பிடுகின்றது.