புதிய ‘ஒமிக்ரோன்’ வைரஸ் திரிபு நாட்டில் பரவுவதற்கான வாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் புதிய ‘ஒமிக்ரோன்’ தொற்றுக்குள்ளானவர்கள், அதுகுறித்து அறிந்திராமல் நாட்டுக்குள் பிரவேசிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களை, மாதிரி பரிசோதனையினூடாக மாத்திரமே அடையாளம் காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.