தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் அதிகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக போராடாது என அமெரிக்க தடுப்பூசி உற்பத்தியாளர் மடர்னாவின் தலைவர் கூறியுள்ளார்.
இதற்காக புதிய தடுப்பூசியை தயாரிக்க பல மாதங்கள் எடுக்கும் என்றும் மடர்னா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றிய தரவு கிடைக்கும் என்றும் ஸ்டீபன் பான்செல் கூறினார்.
கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான புதிய மாறுபாடு உறுதியான நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, வளர்ந்து வரும் நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனமும் ஒமிக்ரோன் பிறழ்வு பரவுவதால் உலகளாவிய ரீதியில் ஆபத்து மிக அதிகம் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.