மட்டக்களப்பு- திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை, எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவொன்று பதிவாகியுள்ளது.
திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை, தேநீர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயற்படுத்திய வேளையில் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு, வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளையில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டதை உணர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்த்தப்போது, எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அதன்பின்னர், வெடிப்பு சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கும் கிராம கிராமசேவகர் அலுவலருக்கும் குடும்பத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.