கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் HOLGER SEUVERT ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் விவசாயத்துறை தொடர்பான அபிவிருத்திக்கு, ஜேர்மன் அரசாங்கத்தினால் முடியுமான பூரண ஒத்துழைப்பை வழங்க உள்ளது.
சுமார் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக கிழக்கு ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் பிராந்திய அபிவிருத்தி உட்பட ஏற்றுமதி வாய்ப்புகளும் ஐரோப்பிய சந்தைக்கு மேற்கொள்ள ஏதுவாக அமையும் என கூறப்படுகின்றது.
முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இலங்கையினுடைய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்க முடிவதோடு ஏற்றுமதி அபிவிருத்தியும் ஏற்படக்கூடிய நிலவரம் ஏற்படும் என ஜேர்மன் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மன் உயர்ஸ்தானிகருடன் ஜேர்மன் வர்த்தக சங்க தலைவரும் இதில் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ.வணிகசிங்க, ஆளுநர் செயலாளர் எல்.பீ.மதனாயக்க உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.