முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால், அவர் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














