வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதுடன் 43 படையணியின் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.
ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகிய பின்னர் சம்பிக்க ரணவக்க புத்திஜீவிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அமைப்பே 43 படையணி ஆகும்.
அத்துடன் தான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், நெடுந்தூர பேருந்து நிலையம், யாழ்ப்பாண மாநகரசபை புதிய கட்டடம் போன்றவற்றை பார்வையிட்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் நெடுந்தூர புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் பாவனைக்கு வராமல் இருப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.