முன்னாள் ஜனாதிபதி யாஹ்யா ஜம்மே பதவியை விட்டும் 2017 இல் நாட்டை விட்டும் வெளியேறிய பின்னர் கம்போடியாவில் முதல் தேர்தல் இடம்பெறுகின்றது.
தற்போதைய ஜனாதிபதி ஆடாமா பாரோ உட்பட 6 பேர் ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேற்கு ஆபிரிக்க நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கான லிட்மஸ் சோதனையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
சுமார் 9 இலட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வேலையின்மை, கோவிட் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து பொருளாதார மீட்சி என்பனவற்றை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.