சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலிலுள்ள அயுங்கின் ஷோலில், பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்த படகுகள் மீது, சீன கடலோர காவல்படை கப்பல்கள் தண்ணீர் பீரங்கிகளை வீசியதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சம்பவத்திற்கு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த16 நவம்பர் 2021 அன்று,அயுங்கின் ஷோலில் (இரண்டாம் தாமஸ் ஷோல்) பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, மூன்று சீனக் கடலோரக் காவல்படை கப்பல்கள், இரண்டு பிலிப்பைன்ஸ் விநியோகப் படகுகளைத் தடுத்து, தண்ணீர் பீரங்கி ஊடாக தாக்கியது என பலவானிலுள்ள மேற்குக் கட்டளை தெரிவிக்கிறது என அமைச்சகம் ட்வீட் செய்தது.
மேலும் அதிர்ஷ்டவசமாக, யாரும் காயமடையவில்லை. ஆனால் எங்கள் படகுகள் அவற்றின் மறுவிநியோக பணியை நிறுத்த வேண்டியிருந்தது. சீனாவின் தூதர் HE Huang Xilian மற்றும் பெய்ஜிங்கில் உள்ள வெளியுறவு அமைச்சகம் ஆகியோருக்கு எங்கள் சீற்றம், கண்டனம் மற்றும் எதிர்ப்பை வலுவான வார்த்தைகளினால் தெரியப்படுத்தியதாக அமைச்சகம் கூறியுள்ளது.
அயுங்கின் ஷோல் கலயான் தீவுக் குழுவின் (கேஐஜி) ஒரு பகுதியாகும். இது பிலிப்பைன்ஸின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அத்துடன் பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு இறையாண்மை, உரிமைகள் மற்றும் அதிகார வரம்பு உள்ளது என்று அமைச்சகம் கூறியது. .