நாடாளுமன்றில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சம்பவங்கள் குறித்து ஆராயும் குழுவிற்கு அரச மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் உள்ள உறுப்பினர்களை நியமிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசியபோதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அவ்வாறு நியமித்தால் மட்டுமே இந்த விடயத்தில் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதுவே சிறந்த தெரிவு என்றும் சபாநாயகரிடம் கூறினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து சபையில் நிலவும் நெருக்கடிக்கு ஒரு வழியை முன்மொழிந்தமைக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நன்றி தெரிவித்தார்.