நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முறையாக கூடவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, குறித்த குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதன் உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து, மீள இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான பரிந்துரைகளை முன்வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டது.
அதாவது, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர யாப்பா, ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், விஜித ஹேரத், கயந்த கருணாதிலக ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.