பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி நடவடிக்கை திருப்திகரமான வகையில் முன்னெடுக்கப்படுவதனால் நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொத்தணி உருவானதைப் போன்று புதிய கொத்தணி உருவாகக் கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் அனைத்து குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான இலகுவான வழி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதே என பலர் கூறினாலும், அத்தகைய நடவடிக்கையினால் உள்ளூர் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.