தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கியமை திட்டமிடப்படாத தீர்மானம் என சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
சரியான திட்டமிடல் இன்றி அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார தொழில் நிபுணர்கள் கல்வியகத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய மாறுபாடு நாட்டுக்குள் வருவதை தடுக்க முடியாது என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செய்யப்பட்டு வருகின்றது என அவர் குற்றம் சாட்டினார்.