சூறாவளியால் பேரழிவிற்குள்ளான நாட்டின் மத்திய பகுதிகளுக்கு அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கென்டகி, அர்கன்சஸ், இல்லினாய்ஸ் உள்பட சில மாகாணங்களில் சூறாவளி திடீரென தாக்கியதில் ஏராளமான கட்டடங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன.
இந்த சூறாவளியினால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான கென்டகிக்கு நிதியை விடுவித்து, அவசரகால பேரிடர் பிரகடனத்தில் ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய சூறாவளி இது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இதில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்டார்.
இதேவேளை அவசர நிதிகள் தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களான மிசோரி, ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், டென்னசி மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என கூறினார்.