பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 633 நோயாளிகள் சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்களுடன் சேர்த்து கடந்த 24 மணிநேரத்தில் 54,073 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இருப்பினும் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தில் வைரஸின் ஆதிக்க வடிவமாக ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் என வைத்தியர் நிக் டேவிஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் உட்புற, பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற பிளான் பி நடவடிக்கைகள் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் திங்கட்கிழமை முதல் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.