இங்கிலாந்தில் உள்ள 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பூஸ்டர் தடுப்பூசியை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி, ஒமிக்ரோனுக்கு எதிரான இன்றியமையாத பாதுகாப்பு என தரவுகள் காட்டுவதாக சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு செயலாளர் சாஜித் ஜாவிட் கூறியுள்ளார்.
முன்னதாக 2வது டோஸ் செலுத்தி 6 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது மூன்று மாதங்களுக்குப் பின்னர் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் மாறுபாடு ஏப்ரல் இறுதிக்குள் 25,000 முதல் 75,000 இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை வரை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.