அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் ஒருபோதும் மக்களை பட்டினியில் வைக்கப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒரு கிலோ அரிசியின் விலையை 300 ஆக உயர்த்த திட்டங்கள் மேற்கொள்பட்டதாக கூறினார்.
இருப்பினும் அந்த திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது 1 கிலோ நாட்டு அரிசி 99.50 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.