வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க முயன்ற போது வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வெடிப்பு சம்பவத்தினால், குறித்த பகுதியில் உள்ள சுமார் 20 வீடுகளில் தீப்பரவல் ஏற்பட்டதாக கெப் ஹெய்டியன் நகர பிரதி முதல்வர் தெரிவித்துள்ளார்.