மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதல் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மேற்படி மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, “இன்று அரசு தரப்பு அவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.
உங்கள் அனைவரிடமும் அவையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.