ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 27பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு ஜப்பானில் உள்ள வணிக வளாகம் மற்றும் பொழுதுபோக்கு பகுதியில் உள்ள எட்டு மாடி கட்டடத்தின் நான்காவது அல்லது ஐந்தாவது மாடியில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் போது பெரும்பாலானோர் புகையின் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தனர். மொத்தம் 28பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.
காலை 10 மணிக்கு, கிளினிக் வணிகத்திற்காக திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டது, மேலும் 30 நிமிடங்களில் பெரும்பாலும் அணைக்கப்பட்டது.
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகள், கட்டடத்தின் நான்காவது மாடி ஜன்னல்களிலிருந்தும், மனநல மருத்துவமனை அமைந்துள்ள கட்டடத்தின் கூரையிலிருந்தும் புகை வெளியேறுவதைக் காட்டியது.
இந்த மாடியில் மனநலச் சேவைகள் மற்றும் பொது மருத்துவப் பராமரிப்பு வழங்கும் மருத்துவமனை இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
சந்தேகத்திற்கிடமான தீவிபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைத்ததாக நம்பப்படுகிறது.