டவுண்சைட் தோட்டத்திலுள்ள Line No 03 மற்றும் 04 இற்கான குடிநீர் திட்டத்தினை இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குடிநீர் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
















